சமூக வலைத்தளங்களில் தற்போது வினோதமான காணொளி ஒன்று வெளியாகி அதிக அளவில் பகிரப்பட்டு வருகிறது. பொதுவாகத் திரையரங்குகளுக்குச் செல்பவர்கள் வெளியில் இருந்து உணவுப் பொருட்களை எடுத்துச் செல்ல அனுமதி மறுக்கப்படுவதோடு அங்குள்ள உணவகங்களில் அதிக விலை கொடுத்துப் பொருட்களை வாங்க வேண்டிய சூழல் நிலவுகிறது.
இதனைத் தவிர்க்கும் பொருட்டு பெண் ஒருவர் இரண்டு தண்ணீர் பாட்டில்களை நன்றாகக் கழுவி உலர வைத்து விட்டு அதில் தண்ணீருக்குப் பதிலாகத் தின்பண்டங்களை நிரப்பி நூதனமான முறையில் திரையரங்கிற்குள் கொண்டு சென்றுள்ளார்.
View this post on Instagram
திரையரங்கு ஊழியர்களின் சோதனையில் சிக்காமல் அந்தப் பெண் தனது திட்டத்தில் வெற்றியடைந்து உள்ளே அமர்ந்து படம் பார்த்தபடி தின்பண்டங்களைச் சாப்பிடும் இந்தக் காணொளி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிரப்பட்டு ஆயிரக்கணக்கான லைக்குகளைப் பெற்றுள்ளது.
இந்தக் காணொளியைப் பார்த்த பயனர்கள் பலர் தங்களின் கருத்துகளைப் பதிவிட்டு வருவதுடன் ஒரு சிலர் இது நல்ல யோசனை என்றும் மற்றவர்கள் தங்கள் ஊரில் பாட்டில்களைத் திறந்து சரிபார்ப்பார்கள் என்றும் நகைச்சுவையாகக் கூறி வருகின்றனர்.
