செய்தியாளர்களிடம் பேசிய மறைந்த முன்னாள் தமிழக முதலவர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா,   அயோதியிலேயே ராமருக்கு கோவில் கட்டக்கூடாதுன்னு யாரும் சொல்ல முடியாது. அது கட்டுறாங்க  நல்ல விஷயம் தான்.  அம்மா இதை ஏற்கனவே சொல்லி இருக்காங்க, பலமுறை சொல்லி இருக்காங்க….  அயோதியில ராமருக்கு கோவில் கட்டாம, எங்க கட்டறது அப்படி எங்க அம்மாவே கேள்வி கேட்டு இருக்காங்க. அதனால இது செய்யலாம்.

கிளாப்பாக்கம் ஃபியூச்சர் பிளான்ல சென்னை பெரிதாக போகும்போது டிராபிக் நெனச்சு தான் அந்த இடத்தை சொன்னது. அது அம்மாவே அனௌன்ஸ் பண்ணி இருந்தாங்க. ஆனா அம்மால் இப்படி செய்யறதா ? இல்ல.  இப்போ ஒன்றரை கிலோ மீட்டர்ல ரயில்வே ஸ்டேஷன் இருக்கு. நீங்க அதுக்கு பஸ் ஏற்பாடு எல்லாம் முன்னாடியே பண்றது இல்லையா ? நீங்க அதையெல்லாம் செஞ்சிட்டு தானே நீங்க அதை திறக்கணும்.

உங்களுக்கு நூறாவது ஆண்டு முடிய போகுது…  முடிய போகுது அப்படின்னு ஒரு பிரஷர்ல,  நீங்க மக்கள் மேல அந்த பிரஷர் கொண்டு போய் திணிக்கிறீங்க, அதெல்லாம் தவறு. அங்க ஒரு போலீஸ் ஸ்டேஷன் இருந்திருக்கணும். இதையெல்லாம் ஏற்கனவே பிளான்ல இருக்கு. அதை செய்யல.  ஒரு ஹோட்டல் வசதி கிடையாது, ஒரு டீ வாங்கி சாப்பிடணும்னு டீ வாங்குவதற்கு இடமில்லை…   அதை எல்லாம் எப்ப சொல்றாங்க ? போய் திறக்கிறதுக்கு முன்னாடி அதிகாரிகளுக்கு  தகவல்  போகுது.

நாளைக்கு திறக்கறாரு…  அதனால உடனடியா நீங்க  இந்த ஊர்ல இருந்து வர பஸ் எல்லாம் கிளம்பறதுக்கு வந்துரனும் அப்படிங்கறாங்க.  பஸ்ல டிக்கெட் கொடுத்து ஏறுனவங்களுக்கு நாம எங்க போய் இறங்கப்போறோம்னு தெரியல ? இது எப்படி அவங்கள போய் ரீச் ஆகும்னு நினைக்கிறாங்க…  அப்போ அந்த லட்சணத்துல இந்த அரசாங்கம் போயிட்டு இருக்கு, அது தவறுதான். அதனால மக்கள் கஷ்டப்படுறாங்க.  நீங்க அதையெல்லாம் நினைக்கணும். திறக்கிற நாளிலிருந்து எத்தனை நாளில் பொங்கல் விடுமுறை வருது, எவ்வளவு பேர் மக்கள் இங்க வந்து சென்னையில் இருந்து வெளியூர்களுக்கு போறவங்க இருக்காங்க….  அதை எல்லாம் நீங்க கணக்கு போட்டதா தெரியல என தெரிவித்தார்.