அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் செய்தியாளர்களை  சந்தித்தார். அப்போது பேசிய அவர், பிற்படுத்தப்பட்டோர், ஏற்றத்தாழ்வு, ஏழை – பணக்காரர்,  ஜாதி , மதத்திற்கு  அப்பாற்பட்டவன் நான். அதனால எனக்கு பிற்படுத்தப்பட்டோர் அப்படியெல்லாம் எந்த எண்ணமும் கிடையாது. எல்லாரும் சமம் என்று நினைக்கிற  நான்,  சமத்துவ கட்சியின்  தலைவர். அதனால எல்லாரும் சமம்.

வாய்ப்பு எப்படி இருக்கோ…  அவங்க கேட்டாங்கன்னா நான் கொடுப்பேன்….  கட்சியில யார் நிக்கணும்னு ஆசைப்படுறாங்களோ, ஒருவேளை நான் முடிவெடுக்கணும்னு வச்சுக்கோங்களேன்….  எங்களுக்கு ஒரு அஞ்சு தொகுதி  கொடுத்துட்டாங்க…. இந்த கட்சியுடன் சேர்ந்து நில்லுங்க என சொல்லிட்டாங்க…  அப்ப நிச்சயமா எல்லாருக்கும் வாய்ப்பு தருவதற்கான முயற்சி கண்டிப்பாக எடுப்போம். 

திமுக ஆட்சியில் அவர்களுடைய செயல்பாடுகள், இப்ப வந்து ஒரு அமைச்சர் ஜெயில்ல இருக்கிறார்.  இன்னொரு அமைச்சர் மேல குற்றச்சாட்டு வச்சிருக்காங்க.  இதையெல்லாம்  அவங்களுக்கு சாதகமா பயன்படுத்த வேண்டும் என்றால்,  ஊழல் செய்யல அப்படின்னு நிரூபிக்கணும்.  அதை செய்யாமல் போகும்போது,  மக்கள் பார்த்துட்டு தான் இருக்காங்க.  இன்னைக்கு ஒரு தீர்மானம் போட்டு இருக்காங்க….

அதை பத்தி யாரும் பேசல….  முக்கியமான தீர்மானம் என்னன்னா….. வெள்ள நிவாரணத்திற்காக அனைவருக்கும் கொடுத்து இருக்காங்க….  தென்காசி பகுதியில் இருந்து வெள்ள நீரால் யாரும் பாதிக்கப்படவில்லை, அவர்களுக்கும் பணம் போய் சேருது.   யார் பாதிக்கப்பட்டிருக்காங்களோ,  அவங்களுக்கு கொடுத்திருந்தால் சிறப்பா இருக்கும்னு ஒரு தீர்மானத்தை போட்டு இருக்கோம்.    இந்த மாதிரி சிந்தனை உள்ளவன் தான் நான் என தெரிவித்தார்.