செய்தியாளர்களிடம் பேசிய பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் அன்புமணி ராமதாஸ், அன்பு ஊடக நண்பர்களுக்கு  வணக்கம். இன்று சேலம் மாவட்டத்தில் உள்ள ஓமலூர் சட்டமன்ற தொகுதி மற்றும்  வீரபாண்டி சட்டமன்ற தொகுதியில் உள்ள எங்கள் கட்சியின் வாக்குச்சாவடி செயல் வீரர்கள் கூட்டம் காலையிலும்,  மாலையில் ஆத்தூர், கங்கவள்ளி ஏற்காடு சட்டமன்ற தொகுதி மற்றும் கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற தொகுதி உட்பட வாக்குச்சாவடி செயல் வீரர்கள் கூட்டம் நடைபெற உள்ளது.

தேர்தலுக்கு கடந்த 10 மாதங்களாக தயார் நிலையில் இருக்கின்றோம்.  நேற்றைய முன் தினம் நடைபெற்ற எங்கள் கட்சியின் மாநில சிறப்பு பொது குழுவில் நாடாளுமன்ற தேர்தல் சம்பந்தமான அரசியல் முடிவுகளை எடுத்திருக்கிறோம். அதன்படி தமிழ்நாட்டின் நலன் மற்றும் இந்தியாவின் நலன் கருதி அதற்கு ஏற்ப முடிவுகளை எடுக்க  எங்களுடைய மருத்துவர் அய்யாவிற்கு அதிகாரத்தை பொதுக்குழு வழங்கியிருக்கிறது.

சேலம் மாவட்டத்தில் உள்ள…  நீண்ட கால பிரச்சனைகள்,  தீர்வு வராத பிரச்சனைகள், நானும்  ஒவ்வொரு முறையும் இங்கே வந்து,  உங்களிடம் தெரிவித்தும்…  எந்த நடவடிக்கையும் அரசு எடுக்கவில்லை. சேலம் – மேட்டூர் உபரி நீர் பிரச்சனை முதன்மையான பிரச்சினையாக இருக்கிறது. இன்றைய கட்டத்திலே காலநிலை மாற்றம்,  பருவநிலை மாற்றம்,  பிரச்சனைகள் எல்லாம் உலக அளவில் வந்தும்….  அதனுடைய தமிழ்நாட்டில் இருந்தும்…  எந்த நடவடிக்கை அரசு எடுக்காதது எங்களுக்கெல்லாம் மிகுந்த வருத்தம் அளிக்கிறது என பேசினார்.