தமிழக பாஜக சார்பில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய கட்சி தலைவர் அண்ணாமலை பேசும் போது, உண்மையான முன்னேற்றம் திருப்பூருக்கு வந்திருக்கு என்றால் ? அது அரசால் வரவில்லை. உங்கள் உழைப்பால் வந்து இருக்கு. 1983இல் 50 கோடி ரூபாய் வருமானம் இருந்த இந்த ஊரு, இன்னைக்கு எக்ஸ்போர்ட் மட்டுமே 50,000 கோடி ரூபாய்க்கு இந்த மாநகரம் செய்து கொண்டிருக்கிறது. இதற்கு எந்த அரசும் வந்து சொந்தம் கொண்டாட முடியாது.

நான் வந்து முதலமைச்சராக இருக்கும் போது… நான் அமைச்சராக இருக்கும் போது….. திருப்பூரிலே உட்கார்ந்து…..  இங்கே தூங்கி நான் உங்களை வளர்த்து விட்டேன் என சொல்ல முடியாது. நீங்க தூங்காம உழைச்சி வளர்த்தது அது. இதில் அரசியல்வாதிகள் சொந்தம் கொண்டாடுவதற்கு எல்லாம் யாருக்கும் உரிமை கிடையாது.

யாருக்கும் உரிமை இல்லை. எந்த அரசியல்வாதிக்கும் உரிமை இல்லை,  திருப்பூர் வளர்ந்ததற்கு நான் தான் காரணம் என்று சொல்வதற்கு… சுயமாக இந்த ஊரு முளைச்சு,  மக்கள் நீங்கள் கடுமையாக வேலை செஞ்சு, ஒரு பட்டன் மாஸ்டர்ல இருந்து தொழிலதிபர் வரைக்கும், வேலையை இங்கே செய்து திருப்பூரை  வளர்த்து எடுத்து இருக்கீங்க. அதனால் ஊழலைப் பற்றி பேசுவோம், ஊழலைப் பற்றி பேச வேண்டிய நேரம் வந்துடுச்சு என தெரிவித்தார். திருப்பூர் வளர்ச்சியை யாரும் உரிமை கொண்டாட கூடாது என்ப தமிழக அரசியல் களத்த்தை குறிப்பிட்டு அண்ணாமலை சொன்னது அதிமுகவையும் மறைமுகமாக தாக்கி உள்ளது.