மதுரை மாவட்டத்தில் உள்ள சிந்தாமணி பகுதியில் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் 7 மாவட்ட பாஜக நிர்வாகிகளுடன் ஆலோசனைக் கூட்டம் ஒன்று நடத்தினார். அதன் பின் செய்தியாளர்களை சந்தித்த நயினார் நாகேந்திரன் கூறியதாவது, தமிழக வெற்றி கழகம் நிறுவனர் விஜய் பி.ஜே.பியுடன் கூட்டணி இல்லை என கூறியுள்ளார்.

அந்த கேள்விக்கு பதில் அளித்த நயினார் நாகேந்திரன், ஒரு கட்சியின் தலைவர் கூட்டணி வைப்பதும் வைக்காததும் அவருடைய விருப்பமாகும். அந்தந்த கட்சி தலைவர் எடுக்கும் முடிவுக்கு என்னால் எந்த கருத்தும் கூற முடியாது. ஆனால் திமுக ஆட்சி அகற்ற வேண்டும் என்றால் அனைவரும் ஓர் அணியாக செயல்பட வேண்டும்.

மேலும் கூட்டணி குறித்த கேள்விக்கு பதில் அளித்தவர், தேர்தலுக்கு ஓராண்டு உள்ள நிலையில் டிடிவி தினகரன், ஓபிஎஸ் உள்ளிட்டோர் எங்கள் கூட்டணியில் இருக்கிறார்களா என்பது குறித்து விவரங்கள் விரைவில் வெளிவரும். நாங்கள்தான் வரும் தேர்தலிலும் வெற்றி பெறுவோம் என தமிழக முதல்வர் சொல்வதற்கு சுதந்திரம் இருக்கிறது.

ஆனால் அதனை மக்கள் தான் முடிவு செய்ய வேண்டும். மேலும் நமது நாட்டை பாதுகாக்கும் ராணுவ வீரர்கள் குறித்து முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜா போன்றவர்கள் இதுபோன்று தவறுதலாக பேசக்கூடாது.

தொடர்ந்து கூட்டணி குறித்த செய்திகளுக்கு பதிலளித்தவர், ஓபிஎஸ் எங்கள் கூட்டணியில் தான் இருக்கிறார். அதில் எந்தவித சந்தேகமும் இல்லை. அதனால் சென்னை வந்த அமித்ஷா ஓபிஎஸ்ஐ சந்திக்க வேண்டும் என்பது அவசியம் இல்லை.அவசரப்படாதீர்கள் கூடிய விரைவில் கூட்டணி குறித்த அனைத்து கேள்விகளுக்கும் பதில் தெரிய வரும் என கூறினார்.