தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் ரஜினிகாந்த். இப்போது நெல்சன் திலீப் குமார் இயக்கும் ஜெயிலர் திரைப்படத்தில் இவர் நடித்து வருகிறார். இதில் முத்துவேல் பாண்டியன் எனும் கதாபாத்திரத்தில் ரஜினி வருகிறார். இப்படத்தில் கன்னட நடிகர் சிவராஜ் குமார், மலையாள நடிகர் மோகன்லால், தெலுங்கு நடிகர் சுனில், ரம்யா கிருஷ்ணன், தமன்னா, யோகிபாபு, விநாயகன் மற்றும் வசந்த் ரவி உட்பட பல முன்னணி நடிகர்கள் நடித்து வருகின்றனர்.

இந்த படத்தின் சூட்டிங் மும்முரமாக நடந்து வருகிறது. இந்த நிலையில் இத்திரைப்படத்தில் இடம்பெற்றிருக்கும் இசையை ரசிகர் ஒருவர் பழைய நோக்கியா 1100 செல்போனில் இசையமைத்து இணையத்தில் பகிர்ந்து உள்ளார். தற்போது இந்த வீடியோவை ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.