பிரபல மலையாள நடிகையான மஞ்சு வாரியர் தமிழில் ‘அசுரன்’ திரைப்படத்தில் அறிமுகமாகி தமிழ் ரசிகர்களின் மனதில் பெரும் இடத்தை பிடித்துள்ளார். இவர் தற்போது ‘கயட்டம்’, ‘ப்ரதி கூவன்கோழி’, ‘மரக்கர் அரபிக்கடலின்டே சிம்மம்’ போன்ற மலையாள திரைப்படங்களில் நடித்துவருகிறார். சமீபத்தில் வெளியான துணிவு படத்திலும் நடித்துள்ளார். தமிழகத்தை பூர்வீகமாகக் கொண்ட நடிகை மஞ்சு வாரியர் மலையாளத்தில் லேடி சூப்பர்ஸ்டாராக இருக்கிறார்.

இந்நிலையில் இவருக்கு  துணிவு படத்தில் இவருக்கு 1 கோடி ரூபாய் சம்பளம் கொடுக்கப்பட்டதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது. துணிவு ப படத்தில் அஜித்துக்கு சமமான ஒரு வேடத்தில் நடித்து அசத்தியிருந்தார் மஞ்சு வாரியர். இப்படம் 300 கோடி வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது.