நவீன தொழில்நுட்ப உலகத்தில் தினம் ஒரு புதிய சாதனம் அறிமுகமாகி மக்களை வியப்பில் ஆழ்த்தி வரும் நிலையில், தற்போது வாய் மற்றும் பற்களைத் துல்லியமாகப் பராமரிக்கும் அதிநவீன ஏஐ டூத் பிரஷ் ஒன்று இணையத்தில் பெரும் வைரலாகி வருகிறது. சுமாராக 47,300 ரூபாய் (499 டாலர்) வில மதிப்பில் உருவாக்கப்பட்டுள்ள இந்த எலக்ட்ரானிக் பிரஷ், வழக்கமான பல் துலக்கும் முறைகளen முற்றிலும் மாற்றி எழுதும் வகையில் பல்வேறு அசத்தலான அம்சங்களைக் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப விரும்பிகளை ஈர்த்துள்ள இந்த சாதனம் தற்போது சமூக வலைதளங்களில் மிகமுக்கிய விவாதப் பொருளாக மாறியுள்ளது.

இந்த நவீன பிரஷின் மிகச்சிறப்பான சிறப்பம்சமாக அதில் பொருத்தப்பட்டுள்ள ஒரு லட்சம் பிக்சல் நுண்ணிய லென்ஸ் கேமரா பார்க்கப்படுகிறது. நாம் பற்களைத் துலக்கிக் கொண்டிருக்கும் போதே, இந்த மைக்ரோ கேமரா நமது வாய்க்குள் நொடிக்கு 28 புகைப்படங்கள் வரை துல்லியமாகப் பதிவு செய்யும் திறன்கொண்டது. மேலும், செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தின் (AI) உதவியுடன் பற்களுக்கு இடையே உள்ள இடைவெளிகளைத் துல்லியமாகக் கண்காணித்து, வெறும் 100 மி.விநாடிகளில் தண்ணீர் பாய்ச்சி பற்களை மிகச் சுத்தமாக மாற்றும் வசதியும் இதில் இடம்பெற்றுள்ளது.

பற்கள் துலக்கப்படும் விதம் மற்றும் அவை எந்தளவிற்குச் சுத்தமாகியுள்ளன என்பதை நாம் நேரடியாக நமது செல்போன் மூலமாகவே லைவாகப் பார்க்கும் வசதியும் இந்த பிரஷில் கொடுக்கப்பட்டுள்ளது. வாய்வழி சுகாதாரத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் வகையில் வந்துள்ள இந்த அதிநவீன பிரஷ் குறித்த தகவல்கள் இணையத்தில் பரவியதும், பொதுமக்கள் மற்றும் டெக் பிரியர்கள் மத்தியில் கலவையான விவாதங்களும் ஆச்சரியமான கருத்துக்களும் எழுந்து வருகின்றன.