விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் போட்டியாளர்களில் ஒருவராக மகேஸ்வரி கலந்துகொண்டார். அப்போது மகேஸ்வரிக்கும், போட்டியாளர் அசீமுக்கும் இடையில் பிக்பாஸ் வீட்டிற்குள் சில தகராறுகள் நடைபெற்றது. மேலும்  நிகழ்ச்சி முடிந்தபிறகும் அசீமின் ரசிகர்கள் மகேஸ்வரியை சமூகவலைத்தளங்களில் கேலி செய்து வருகிறார்கள்.

இந்நிலையில் மகனுடனான போட்டோவை பதிவிட்டுள்ள மகேஸ்வரி, “நீ அவர்களை போல விஷத்தன்மையுடன் வளர மாட்டாய் என நம்புகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார். அசீம்  ரசிகர்களைத் தான் அவர் குறிப்பிட்டுள்ளார் என்று பலர் கமென்ட் செய்து வருகின்றனர்.