டைரக்டர் சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் ஷாருக்கான் நாயகனாக நடித்திருக்கும் திரைப்படம் “பதான்”. இந்த படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நடிகை தீபிகா படுகோனே நடித்துள்ளார். அதோடு பிரபல பாலிவுட் நடிகர் ஜான் ஆபிரகாம் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இத்திரைப்படம் கடந்த 25ம் தேதி இந்தியா முழுவதும் 8000 திரையரங்குகளில் வெளியாகியது.

இந்நிலையில் சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் ஷாருக்கான் நடிப்பில் வெளியான பதான் படம் வசூலை வாரி குவித்து வருகிறது. இதுவரை ரூபாய்.832 கோடியை வசூலித்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படம் இன்னும் சில நாட்களில் ஆர்ஆர்ஆர் பட வசூல் சாதனையை முறியடிக்கும் என தெரிகிறது. ஆர்ஆர்ஆர் ஒட்டுமொத்தமாக ரூ.1,200 கோடி வசூலித்தது குறிப்பிடத்தக்கது.