தமிழ் சினிமாவில் அல்டிமேட் ஸ்டார் ஆக வலம் வரும் அஜித் எச். வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் மூன்றாவது முறையாக நடித்த துணிவு திரைப்படம் கடந்த மாதம் 11-ம் தேதி ரிலீஸ் ஆகி வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்தப் படத்தில் மஞ்சு வாரியர் கதாநாயகியாக நடித்துள்ள நிலையில், சமுத்திரக்கனி, ஜான் கொக்கேன் போன்றோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்கள்.

இந்நிலையில் துணிவு படம் ரிலீஸ் ஆகி 26 நாட்களை கடந்துவிட்ட நிலையில், உலக அளவில் படத்தின் வசூல் நிலவரம் குறித்த தகவல் வெளிவந்துள்ளது. அதன்படி உலக அளவில் 250 கோடிக்கு மேல் வசூல் சாதனை புரிந்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் வருகிற 8-ம் தேதி துணிவு திரைப்படம் netflix ஓடிடி தளத்தில் ரிலீஸ் ஆகிறது.