அ.தி.மு.க.வின் பொதுச் செயலாளரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி (இபிஎஸ்) வீட்டிற்கு அருகே திடீரெனப் பெருமளவில் போலீசார் குவிந்ததால் அங்குப் பெரும் பரபரப்பும், பதற்றமும் ஏற்பட்டது.
சமீபகாலமாக, அ.தி.மு.க.வில் ஏற்பட்டுள்ள உட்கட்சிப் பூசல்கள் மற்றும் அரசியல் நகர்வுகளுக்கு மத்தியில் இந்த போலீஸ் குவிப்பானது முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது. இந்தப் பதற்றத்திற்குக் காரணம், அவரது இல்லத்தில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதால் போலீசார் அங்கு குவிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் வெடிகுண்டு தடவை நிபுணர்கள் அப்பகுதி முழுவதும் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அண்மைக்காலமாக தமிழக அரசியல் கட்சி தலைவர்களின் வீடுகளில் வெடிகுண்டு மிரட்டல்கள் அடுத்தடுத்து வருவதால் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் இன்று காலை நடிகர் அருள்நிதியின் வீட்டில் வெடிகுண்டு மிரட்டல் வந்ததை அடுத்து தற்போது இபிஎஸ்ஸின் வீட்டிலும் வெடிகுண்டு மிரட்டல் பெறும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையடுத்து, இ.பி.எஸ்.ஸின் வீட்டில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டதால், அங்குத் தொண்டர்கள் மத்தியில் சலசலப்பு ஏற்பட்டு, ஒட்டுமொத்தப் பகுதியிலும் பதற்றமான சூழல் நிலவியது.
