அதிமுகவில் புதிய மாவட்ட செயலாளர்களை நியமித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தற்போது அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறார்.

அதிமுகவை பொருத்தவரை இரண்டாக உடைந்த போது 6 மாவட்ட செயலாளர்கள் ஓபிஎஸ் ஆதரவாளர்களாக பிரிந்து சென்றார்கள்.   அதிமுக எடப்பாடி தலைமையில் ஒருங்கிணைந்த பிறகு,  அந்த ஆறு மாவட்டங்களுக்கு மாவட்ட செயலாளர்கள் நியமிக்கப்படாமல் இருந்தார்கள். தற்போது புதிய மாவட்ட செயலாளர் நியமனம் என்பது அதிமுக பொதுச் செயலாளரால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அந்த அடிப்படையில் கன்னியாகுமரி மாவட்ட செயலாளராக முன்னாள் அமைச்சர் தளவாய் சுந்தரம் நியமிக்கப்பட்டு இருக்கிறார்.  திருச்சி மாநகர் மாவட்ட செயலாளராக  திருச்சி மாநகராட்சியின் முன்னாள் துணை மேயராக இருந்த சீனிவாசன் நியமிக்கப்பட்டுள்ளார்.

பெரம்பலூர் மாவட்ட செயலாளராக இளம்பை தமிழ்ச்செல்வன் நியமிக்கப்பட்டுள்ளார். கும்பகோணம் மாநகர செயலாளராக  ராமநாதனும், தஞ்சாவூர் மத்திய மாவட்ட செயலாளர் எஸ். சரவணன் ஆகியோரும்  நியமிக்கப்பட்டுள்ளார்கள். இந்த புதிய நியமனம் என்பது தற்போது மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அது மட்டுமல்லாமல்  புதிய தலைமை கழக நிர்வாகிகள்,  பல்வேறு அமைப்பில் இருக்கக்கூடிய நிர்வாகிகள்,  புதிய அமைப்புச் செயலாளர்கள் என பல்வேறு முக்கியமான பொறுப்புகளுக்கு நிர்வாகிகளை நியமித்து அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார்.