சென்னையில் வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை தற்போது குறைந்துள்ளது. அதன்படி 19 கிலோ வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை ரூ.57.50 ரூபாய் வரையில் குறைந்து ரூ.1823.50 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
கடந்த மாதம் வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை 25 ரூபாய் வரையில் குறைந்து 1881 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் இந்த மாதமும் விலை அதிரடியாக குறைந்துள்ளது. மேலும் வீட்டு உபயோக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலையில் எந்தவிதமான மாற்றமும் இன்றி 868.50 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
