என் மண், என் மக்கள் பாத யாத்திரையில் பேசிய தமிழக பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் அண்ணாமலை,   யாராவது திமுககாரன் நீட்டை எதிர்த்து உங்களிடம் வந்தால்,  ஒரே வார்த்தை தான் சொல்ல வேண்டும். நீட் வந்த பிறகுதான் ஏழை மக்களினுடைய குழந்தைகள்… விவசாய பெருமக்களின் உடைய குழந்தைகள்… முதல் தலைமுறை பட்டதாரியினுடைய குழந்தைகள்… இன்றைக்கு ஆல் இந்தியா ஃபுல்லா… பிராடு பண்ண முடியும்….

ஆல் இந்தியா  ஒரே என்ட்ரன்ஸ்…. எங்கேயும் ஏமாற்ற முடியாது…. தனியாருக்கு தனி என்ட்ரன்ஸ்,  அரசுக்கு என்ட்ரன்ஸ்…. தனியார் மருத்துவக் கல்லூரி என்றால் 50% டோனேஷன் சீட்…  தனியார் மருத்துவக் கல்லூரி என்றாலும் நீட் தான். தனியார் மருத்துவக் கல்லூரியில் இருக்கக்கூடிய 100% சீட்டுக்கும் இன்றைக்கு நீட்.

இன்றைக்கு ஒரு பொய் வாக்குறுதியை கொடுத்து ஆட்சிக்கு வந்து விட்டார்கள். நங்கள் ஆட்சிக்கு வந்தால்  ஒரே கையெழுத்தில் நீட்டை நீக்கி விடுவோம் என்று சொன்னார்கள். உடனே உதயநிதி ஸ்டாலினிடம் கேட்கிறார்கள். எப்படி ஒரு கையெழுத்தில் நிட்டை நீக்குவீர்கள் ஈன்று கேட்டல் ? அது  ரகசியம் சொல்லமாட்டேன், ஆட்சிக்கு வந்த பிறகு சொல்லுகிறேன் என்று சொன்னார். இன்னைக்கு எப்படி நீட்டை நீக்குவீர்கள் என்றால்,  முட்டை மந்திரவாதி போல, முட்டையை தூக்கிட்டு  வருகின்றார் என தெரிவித்தார்.