கோலிவுட்டின் ‘கியூட்’ ஜோடியாக வலம் வரும் விக்னேஷ் சிவன் – நயன்தாரா தம்பதி பற்றி விக்னேஷ் சிவன் அளித்த சமீபத்திய பேட்டி சமூக வலைதளங்களில் புயலைக் கிளப்பியுள்ளது. தனது திரைப்பயணம் மற்றும் குடும்ப வாழ்க்கை குறித்துப் பேசிய அவர், நயன்தாரா கோபப்பட்டால் நிஜமாகவே ‘டெரர்’ அவதாரம் எடுத்துவிடுவார் என்றும், பல நேரங்களில் தான் தான் இறங்கி வந்து சமரசம் செய்ய வேண்டியிருக்கும் என்றும் வெளிப்படையாகத் தெரிவித்துள்ளார்.

மேலும், தான் எழுதும் ஒவ்வொரு பாடலையும் முதலில் நயனிடம் காட்டி, அவர் ‘ஹார்ட்’ எமோஜி போட்டால் மட்டுமே இசையமைப்பாளர்களுக்கு அனுப்புவேன் எனத் தனது காதல் மனைவியின் மீதுள்ள மரியாதையைப் பகிர்ந்துகொண்டார். அதே சமயம், தனது எதிர்காலத் திட்டம் குறித்து விக்கி சொன்ன தகவல் தான் ரசிகர்களைத் தூக்கிவாரிப் போட வைத்துள்ளது.

“சுமார் 300 முதல் 350 கோடி ரூபாய் வரை சேர்த்துவிட்டால், அதை அப்படியே ஃபிக்சட் டெபாசிட்டில் போட்டுவிட்டு செட்டில் ஆகிவிடுவேன். அதன் மூலம் வரும் வட்டிப் பணத்திலேயே, ஒரு நாளைக்கு 30 லட்சம் ரூபாய் செலவு செய்தபடி நிம்மதியாக இருப்பேன்” என அவர் கூறியுள்ளார். ஒரு நாளைக்கு 30 லட்சமா? என நெட்டிசன்கள் வாயடைத்துப் போயுள்ளனர்.

தற்போது ‘எல்ஐகே’ படத்தின் வெற்றிக்குப் பிறகு அடுத்தடுத்த படங்களில் பிஸியாக இருக்கும் விக்கி, நயன்தாரா சல்மான் கானுடன் நடிக்கும் புதிய படங்களுக்கும் முழு ஆதரவு அளித்து ஒரு ‘பெஸ்ட் கணவராக’ ஜொலித்து வருகிறார்.