நடிகர் விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதா இடையிலான விவாகரத்து சர்ச்சையில், த்ரிஷாவின் பெயர் தேவையில்லாமல் இழுக்கப்பட்டு வரும் நிலையில், அவர் தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிடும் பதிவுகள் பெரும் விவாதத்தை ஏற்படுத்தி வருகின்றன. சமீபத்தில் அவர் ஜிம்மில் உடற்பயிற்சி செய்யும் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில், “நான் பார்க்க சந்தோஷமாக இருக்கலாம், ஆனால் என் உள்ளம் அப்படி இல்லை” (I am happy, but my heart is not) என உருக்கமாகக் குறிப்பிட்டுள்ளார். வதந்திகளால் தான் அவர் இப்படி ஒரு பதிவை இட்டுள்ளாரா என இணையவாசிகள் குழப்பத்தில் உள்ளனர்.

​விஜய் – சங்கீதா விவாகரத்து வழக்கு வரும் ஏப்ரல் 20-ஆம் தேதி செங்கல்பட்டு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகி வரும் வேளையில், த்ரிஷாவின் இந்தப் பதிவு எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றுவது போல் அமைந்துள்ளது. “உள்ளம் காயப்பட்டு இருக்கிறது” என அவர் மறைமுகமாகத் தெரிவிப்பது எதைக் குறிக்கிறது என்று நெட்டிசன்கள் பலவாறாகக் கேள்வி எழுப்பி வருகின்றனர். வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்காமல், இது போன்ற மர்மமான பதிவுகளை அவர் இடுவது விஜய் ரசிகர்களிடையே பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.