பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா ஒப்புதலுடன், தமிழ்நாடு பாஜகவின் மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், மாநில அளவிலான பிரிவுகளுக்கான அமைப்பாளர்கள் நியமனங்களை அறிவித்துள்ளார்.

இதில், அவரது மகனான நயினார் பாலாஜி, விளையாட்டு மற்றும் திறன் மேம்பாட்டு பிரிவு அமைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். மேலும், மாநிலத்தில் உள்ள பாஜகவின் 25 அணிகளுக்கும் புதிய அமைப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.