விஜய் தொலைக்காட்சியில் முன்னணி தொகுப்பாளராக வலம் வருபவர் பிரியங்கா தேஷ் பாண்டே. இவருக்கு எக்கச்சக்க ரசிகர்களும் இருக்கின்றனர். பிரியங்கா தொகுத்து வழங்கும் நிகழ்ச்சிகள் அனைத்துமே ரசிகர்களுக்கு மிகவும் பிடிக்கும்.

நகைச்சுவையால் கவர்வதுதான் பிரியங்காவுக்கு அதிகம் ரசிகர்கள் இருக்க காரணம். இப்போது பிரியங்கா அவரது 31-வது பிறந்தநாளை கொண்டாட லண்டனுக்கு சென்று உள்ளார். லண்டனில் நடுரோட்டில் டான்ஸ் ஆடி தன் பிறந்தநாளை கொண்டாடி உள்ளார் பிரியங்கா.