தமிழகத்தில் நடந்து முடிந்த தேர்தலில் வரலாற்றில் முதல் முறையாக திமுக மற்றும் அதிமுக இல்லாத புதிய கட்சியான தமிழக வெற்றி கழகம் ஆட்சி அமைத்தது. திராவிட கட்சிகளை பின்னுக்கு தள்ளி நடிகர் விஜய் ஆட்சியைப் பிடித்த நிலையில் அதிமுகவுக்கு மாற்று தமிழக வெற்றி கழகம் தான் என்று கூறி வருகின்றனர். இந்த நிலையில் அதிமுக எம்எல்ஏக்கள் நான்கு பேர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தமிழக வெற்றி கழகத்தில் இணைந்த நிலையில் அதிமுக கட்சியின் பல தலைவர்கள் அடுத்தடுத்து தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்து வருகின்றனர்.
அந்த வகையில் தற்போது முன்னாள் எம்எல்ஏக்கள் ஆன கடம்பூர் ராஜூ, உடுமலை ராதாகிருஷ்ணன், எம்எஸ்எம் ஆனந்தன், எம் சி சம்பத் ஆகியோர் இன்று தமிழக வெற்றி கழகத்தில் இணைவதற்காக தற்போது பனையூர் அலுவலகம் வந்துள்ளனர். மேலும் அதிமுகவில் இருந்து அடுத்தடுத்து பல மூத்த தலைவர்கள் விலகி தமிழக வெற்றிக்கழகத்தில் இணைவது ஏற்கனவே உட்கட்சி பூசலில் தவிக்கும் எடப்பாடி பழனிச்சாமிக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.
