நாம் தமிழர் கட்சி 1 இடத்துல கூட டெபாசிட் வாங்காது; ஒரே போடுபோட்ட வீரலட்சுமி!!

செய்தியாளர்களிடம் பேசிய வீரலட்சுமி,  தமிழ்நாடு முழுக்க இந்த வழக்கை  பேசக்கூடிய அளவுக்கு ஊடக வாயில கொண்டு வந்தது யாருன்னா..? நாங்க. எங்களுடைய உழைப்பால், எங்களுடைய திறமையால்…  இதனால நிறைய பொருளாதார இழப்பு எனக்கு. இதனால எங்களுக்கு கெட்ட பெயர் தான் ஏற்பட்டு இருக்கு. நாங்க நல்லது செய்ய போய்…  நாம் தமிழர் கட்சியினர் தினந்தோறும் 100 பேர்,  150 பேர் whatsapp காலில் அசிங்க அசிங்கமா பேசி அனுப்புறாங்க. ஒரு பெண் தலைவர் என்று கூட பார்க்காமல் பேசுறாங்க.

நாம் தமிழர் கட்சி சார்பாக பெண்கள் பாசறையாம்? பெண்கள் பாசறையில் மாநில மகளிர் செயலாளருனு ஒரு லேடி. தமிழ்நாடு மாநில மகளிர் ஆணையர் வாசலில் நின்னு…   விஜயலட்சுயும்,  சீமானுக்கும் ரூமுக்குள்ள உட்கார்ந்து பேசிட்டு இருக்குறப்ப….  அவங்க உடலுறவு பண்ணும் போது…  வீரலட்சுமி விளக்கு பிடிச்சு பார்த்தார்களா ? அப்படின்னு ஒரு வார்த்தை சொல்றாங்க….

நாம் தமிழர் கட்சியுடைய சித்தாந்தம் இதுதானா ? கொள்கை இதுதானா? அப்ப அதிகாரம் இல்லாதப்பவே நீங்க இந்த மாதிரி பேசுறீங்க….   மக்கள் உங்களை ஓட்டு போட்டு தேர்ந்தெடுத்தால்… நீங்கள் பெண்களுக்கு பாதுகாப்பான கட்சியா ?  ஒரு பெண்  பாசறையில் பொறுப்புல இருக்கக்கூடிய பெண்மணி,  இன்னொரு தமிழகத்தில் மிகப்பெரிய  பெண் ஆளுமையா இருக்கிற ஒரு பெண்ணை விளக்கு பிடிச்சு பார்த்தியானு கேட்கிற ? வாய்… நீங்க பெண்களுக்கு பாதுகாப்பு,  பெண்களுடைய உரிமை மீட்டு கொடுக்கப் போறீங்களா?

நாம் தமிழர் கட்சி தமிழகத்தில் 234 தொகுதியில நின்னாலும்… 40 நாடாளுமன்ற தொகுதியில நின்னாலும் ஒரு இடத்துல டெபாசிட் வாங்க முடிஞ்சுதா ? டெபாசிட் வாங்க துப்பில்லாத நீங்க, பெண்கள் உரிமையை பற்றி பேசுறீங்க ? உங்க கட்சியுடைய தலைமை ஒருங்கிணைப்பாளரே பாலியல் குற்றவாளின்னு காவல்துறை விசாரிச்சிட்டு இருக்காங்க.

விசாரணை முடிவில யார் தவறு செஞ்சிருக்காங்க ? யாரு தவறு செய்யலைன்னு தீர்ப்பு வரப்போகுது….. காவல்துறை விசாரணைக்கு பிறகு நீதிமன்றம் தீர்ப்பு கொடுக்க போகுது அதுவரைக்கும் நீங்க அமைதியா இருக்கிறதுல என்ன இருக்கு ? நீங்க எதுக்கு வதந்திகளையும்,  அவதூறுகளை பரப்புறிங்க என தெரிவித்தார்.

Leave a Reply