கேரளா எர்ணாகுளம் மாவட்டம் காலடி எனும் பகுதியை சேர்ந்தவர் அஜின் சாம். இவருக்கு இன்ஸ்டாகிராம் மூலம் களியக்காவிளை பகுதியை சார்ந்த 11-ஆம் வகுப்பு மாணவி ஒருவரிடம் நெருக்கமாக பழக்கம் ஏற்பட்டுள்ளது. அதோடு மாணவியை திருமணம் செய்வதாக வாக்குறுதி அளித்தார் அஜின் சாம். சென்ற ஏப்ரல் மாதம் 17-ம் தேதி களியக்காவிளை பகுதிக்கு வந்த அஜின் சாம் தன் நண்பர்களுடன் சேர்ந்து அப்பெண்ணை அழைத்து சென்றுள்ளார்.
இந்நிலையில் தன் நண்பர்களுடன் சேர்ந்து நெய்யாற்றின் கரையிலுள்ள தனியார் விடுதியில் அடைத்து வைத்து அஜின் சாம் அப்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து உள்ளார். இதுகுறித்த புகாரின்படி எர்ணாகுளம் காலடி பகுதியை சேர்ந்த அஜின் சாம் மற்றும் அவரது நண்பர்களான அகிலேஷ் பாபு, ஜிதின் வர்கீஸ், பூர்ணிமா, தினேஷ், ஸ்ருதி, சித்தார்த் போன்றோரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.