ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனராக இருப்பவர் முகேஷ் அம்பானி. இவருடைய நீண்ட கால பணியாளராக மனோஜ் மோடி என்பவர் இருந்து வருகிறார். இவர் ரிலையன்ஸ் ஜியோ அண்டு ரீடெயிலின் இயக்குநராக இருக்கிறார். மேலும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் நாட்டின் மதிப்புமிக்க நிறுவனங்களில் ஒன்றாக வளர வேண்டிய அனைத்து கோடிக்கணக்கான ஒப்பந்தங்களுக்கும் முன்னின்று செயல்பட்டு அதனை வெற்றியாக்கிய பெருமைக்கு உரியவர்.

முகேஷ் அம்பானியின் வலதுகரம் போன்று திகழ்பவர் மனோஜ் மோடி. இந்நிலையில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் நீண்ட கால பணியாளரான மோடிக்கு, முகேஷ் அம்பானி விலை உயர்ந்த கட்டிடம் ஒன்றை தன் பரிசாக வழங்கியுள்ளார். மும்பையில் முக்கியமான பகுதியில் அமைந்த நிபியான் கடல் சாலை பகுதியில் 22 தளங்கள் கொண்ட பிருந்தாவன் என்று பெயரிடப்பட்ட கட்டிடம் ஒன்று அமைந்திருக்கிறது. ரூ.ஆயிரத்து ஐநூறு கோடி மதிப்பிலான இக்கட்டிடம் அம்பானியால் மனோஜ் மோடிக்கு பரிசாக வழங்கப்பட்டுள்ளது.