பள்ளிக்கூடம் என்பது வெறும் பாடப் புத்தகங்களை மட்டும் படிக்கும் இடமாக இல்லாமல், மாணவர்களின் திறமைகளை வளர்க்கும் களமாகவும், மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொள்ளும் இடமாகவும் இருக்க வேண்டும் என்பதை உணர்த்தும் ஒரு நெகிழ்ச்சியான சம்பவம் தான் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
மஹாராஷ்டிராவில் உள்ள மாவட்ட அரசுப் பள்ளி ஒன்றில் பணிபுரியும் ஆசிரியர் ஒருவர், தனது பள்ளி மாணவிகளுடன் சேர்ந்து போட்ட துள்ளலான நடனம் இணையவாசிகளின் கவனத்தை ஈர்த்து மனங்களை வென்று வருகிறது.
பிராந்திய அளவில் மிகவும் புகழ்பெற்ற பாடலுக்கு, அந்த ஆசிரியர் தனது மாணவிகளுடன் சேர்ந்து எவ்வித தயக்கமும் இன்றி செம எனர்ஜியுடன் நடனமாடியுள்ளார். வகுப்பறை மற்றும் பள்ளி வளாகத்தில் அரங்கேறிய இந்த நடனத்தில், மாணவிகள் ஆடிய ஸ்டெப்புகளுக்கு இணையான வேகத்தோடும், முகத்தில் அலாதியான புன்னகையோடும் அந்த ஆசிரியர் ஆடிய ஆட்டம் பார்ப்பவர்களைச் சுண்டி இழுக்கும் வகையில் அமைந்துள்ளது.
ஆசிரியர்-மாணவர் என்ற எல்லையைத் தாண்டி, ஒரு நண்பனாக அவர்களோடு இணைந்து அவர் வெளிப்படுத்திய இந்த உற்சாகம் காண்போரின் மனதையும் சட்டென்று தொட்டுவிட்டது. இந்த அழகிய வீடியோ சமூக வலைத்தளங்களில் பதிவேற்றப்பட்ட சில மணி நேரங்களிலேயே ஆயிரக்கணக்கான பார்வைகளையும் லைக்குகளையும் அள்ளிக்குவித்து வருகிறது.
“ஆசிரியர் என்பவர் மாணவர்களுக்குக் பயத்தை ஏற்படுத்துபவராக இல்லாமல், அவர்களின் திறமைகளை ஊக்கப்படுத்தும் தோழனாக இருக்க வேண்டும் என்பதற்கு இந்த வீடியோ ஒரு சிறந்த எடுத்துக்காட்டு” என்றும், “இப்படிப்பட்ட ஆசிரியர்கள் கிடைத்தால் எந்தக் குழந்தையும் பள்ளிக்குச் செல்ல தயங்காது” என்றும் நெட்டிசன்கள் தங்களது கமெண்ட்கள் மூலம் பாராட்டுக்களை மழை போலப் பொழிந்து வருகின்றனர்.
See this Instagram video by @zp_school_stars https://t.co/HRkMEU9jNz
“>
