கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள வேடர் தட்டகல்லை பகுதியில் புகழேந்தி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கூலி வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் புகழேந்தி சந்தூர்-காவேரிபட்டணம் சாலையில் கண்ணன்குட்டை அருகே மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த வேன் மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது.

இந்த விபத்தில் படுகாயமடைந்த புகழேந்தி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து அறிந்த போலீசார் அங்கு சென்று புகழேந்தியின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.