தமிழக அரசியல் களம் தற்போது மகளிர் உரிமைத் தொகை விவகாரத்தால் சூடுபிடித்துள்ளது. நாம் தமிழர் கட்சியின் மாநில மாநாட்டில் பேசிய ஒருங்கிணைப்பாளர் சீமான், “அரசு 5,000 ரூபாயைக் கொடுக்கிறது, ஆனால் அந்த ஐந்தாயிரத்தை வாங்கும் என் அம்மாக்களின் கைகளில் 2 லட்சம் ரூபாய் கடன் இருக்கிறது என்பதை அறிவுச் சமூகம் அறிய வேண்டும்” என்று காட்டமாக விமர்சித்துள்ளார்.
இந்தத் திட்டத்தை வெறும் தேர்தல் கால நாடகம் என விமர்சித்த அவர், மக்கள் இந்த உண்மையைச் சிந்திக்கத் தொடங்கிவிட்டால், மாற்றத்திற்கான அரசியல் தானாகவே தொடங்கிவிடும் என்று அதிரடியாகத் தெரிவித்தார்.
மேலும், 2026 சட்டமன்றத் தேர்தலில் நாம் தமிழர் கட்சி எவ்விதக் கூட்டணியும் இல்லாமல் தனித்தே போட்டியிடும் என்றும், 117 ஆண்கள் மற்றும் 117 பெண்கள் எனச் சமமாக வேட்பாளர்களை நிறுத்தப்போவதாகவும் அவர் மீண்டும் உறுதிபடத் தெரிவித்துள்ளார்.
