கோயம்புத்தூர் மாவட்ட சைபர் கிரைம் போலீசில் கோவை, திருப்பூரை சேர்ந்த 20-க்கும் மேற்பட்டோர் புகார் அளித்தனர். அந்த புகாரியில் கூறியிருப்பதாவது, கோவை லாலி ரோடு பகுதியில் வசிக்கும் பாக்கியலட்சுமி, அவரது மகள் நாகரத்தினம், மகன் மணிகண்டன் ஆகியோர் ஆர்.எஸ் புரத்தில் ஆன்லைன் வர்த்தக நிறுவனம் நடத்தி வந்தனர். கடந்த 2018-ஆம் ஆண்டு முதல் கோவை மற்றும் திருப்பூர் சேர்ந்த பலர் அந்த நிறுவனத்தில் பணத்தை முதலீடு செய்தனர்.

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் முதல் 8 சதவீத வட்டிக்கு பதிலாக ஆறு சதவீதம் வட்டி மட்டுமே வழங்கப்பட்டது. பின்னர் கடந்த மார்ச் மாதம் முதல் வட்டி தொகை தரவில்லை. அவர்கள் முதலீட்டு தொகை 5 கோடி ரூபாயை திருப்பி தராமல் மோசடி செய்து விட்டனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகாரில் குறிப்பிட்டுள்ளனர். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் பாக்கியலட்சுமி, நாகரத்தினம், மணிகண்டன் அவரது மனைவி ராதா ஆகிய நான்கு பேரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்