விருதுநகர் மாவட்டத்திலுள்ள அல்லம்பட்டி அனுமன் நகரில் செல்லம்மாள் என்பவர் வசித்து வருகிறார். இவர் தெப்பம் பஜாரில் இருக்கும் தனியார் வங்கி ஏ.டி.எம் மையத்திற்கு பணம் எடுப்பதற்காக சென்றுள்ளார். இந்நிலையில் அங்கு நின்று கொண்டிருந்த 35 மதிக்கத்தக்க பெண்ணிடம் ஏடிஎம் கார்டை கொடுத்து பணம் எடுத்து தருமாறு உதவி கேட்டுள்ளார். இதனையடுத்து தனது 7 வயது பேரன் வாந்தி எடுத்ததால் செல்லம்மாள் பெண்ணிடமிருந்து 1500 ரூபாயை மட்டும் வாங்கி கொண்டு ஏடிஎம் கார்டை பெற நினைவில்லாமல் சென்று விட்டார்.
கடந்த 18-ஆம் தேதி செல்லம்மாளின் செல்போனில் எண்ணிற்கு வங்கி கணக்கில் இருந்து 2500 ரூபாய் பணம் எடுக்கப்பட்டதாக குறுந்தகவல் வந்தது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த செல்லம்மாள் வங்கி கணக்கு புத்தகத்தை பதிவு செய்து பார்த்த போது பல்வேறு தவணைகளாக 41 ஆயிரம் ரூபாய் வரை எடுத்து மோசடி செய்தது தெரியவந்தது. இதுகுறித்து செல்லம்மாள் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.