செய்தியாளர்களிடம் பேசிய கோவை தெற்கு சட்டமன்ற தொகுதி உறுப்பினர் வானதி சீனிவாசன், பிரதமர் மோடியும், தமிழக முதல்வரும் ஒரே மேடையில் இருந்து ஒரு தேசிய அளவிலான நிகழ்வு. மாநில அரசுதான் அதை முன்னெடுத்துச் செய்ய வேண்டும். அந்த வகையிலே ஒரு அரசு நிகழ்ச்சியில் மாநிலத்தினுடைய முதல்வரும்,  பிரதமரும் கலந்து கொள்வது என்பது சாதாரணமாக நடப்பது தான். இதிலே கூட்டணி என்பதோடு  பொருத்திப் பார்க்கக் கூடிய வாய்ப்பு எங்களுக்கு தெரியவில்லை.

இரண்டாவது மழை – வெள்ளம் இதற்கு எல்லாமே தேவையாக உதவிகளை பிரதமர் செய்து கொண்டுதான் இருக்கிறார்.  வெள்ளை பாதிப்புகளுக்கு உடனடியாக அதற்கான ப்ராசஸ் ஆரம்பித்து விட்டார்கள், உடனடியாக கொடுக்க வேண்டிய தொகையும் கொடுத்து இருக்கிறார். இது மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வு….   ஸ்ரீராமர் தொடர்புடைய இடங்களுக்கு

தான வந்து இருக்காரு. அது தமிழ்நாட்டுக்கு பெருமை தானே… அதனால், கொடுக்க வேண்டிய அக்கறையை தமிழகத்துக்கு கொடுக்கின்றார். கொடுக்க வேண்டிய நிதியை கொடுக்கின்றார். ராம பிரானுக்கு அயோத்தியில் கோவில் காட்டுகின்ற பொழுது தமிழகத்தில் இருந்து பல்வேறு விஷயங்கள் அங்கு நெருக்கமாக இருப்பதற்கான பெருமிதமான அடையாளங்களோடு செல்வது என்பது தமிழகத்திற்கு கூடுதல் சிறப்பு என தெரிவித்தார்.