கோவை மாவட்டம் சூலூரில் தெருவில் நடந்து சென்ற 10 வயது சிறுமியை வளர்ப்பு நாய் கடித்து குதறியுள்ளது. இதனையடுத்து சிறுமியின் தந்தை அளித்த புகாரின் பேரில் நாயின் உரிமையாளர் தனபால் மீது இரண்டு பிரிவுகளின் கீழ் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். தமிழகத்தில் சமீப காலமாகவே நாய் கடி சம்பவங்கள் தொடர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.