முன்னாள் மனைவி பீலா வெங்கடேசன் வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்த புகாரில் முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் கைது செய்யப்பட்டுள்ளார். ஏற்கனவே, பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் சிக்கி தண்டனை பெற்றுள்ளார் ராஜேஷ் தாஸ். உச்சநீதிமன்றம் அவரை கைது செய்ய இடைக்கால தடை விதித்திருந்தது குறிப்பிடத்தக்கது.