தமிழகம் முழுவதும் கோடை விடுமுறை முடிவடைந்து ஜூன் 6ம் தேதி பள்ளிகள் திறக்கப்படுவதாக பள்ளிக்கல்வித்துறை  அறிவித்துள்ளது. இந்நிலையில், மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், பள்ளிகளில் தூய்மைப் பணிகளை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது.

அதன்படி கழிப்பறைகள் சரியாக இருக்கிறதா, தண்ணீர் தொட்டிகள் முறையாகப் பராமரிக்கப்பட்டுள்ளதா?, வகுப்பறைகள் பாடம் நடத்த ஏதுவாக இருக்கிறதா? உள்ளிட்டவை குறித்து ஆய்வு செய்ய மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.