நாடாளுமன்ற தேர்தலானது ஏழு கட்டங்களாக நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் முதல் கட்டமாக முடிந்து விட்டது. வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி எண்ணப்படுகிறது. இதில் யார் ஜெயிக்கபோகிறார்கள் என்று எதிர்பார்ப்பு எழுந்து வருகிறது. இந்நிலையில் பாஜக அதிக வாக்குகள் வாங்கினால் கட்சியை கலைத்து விடுவதாக சீமான் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் கூட்டணி கட்சிகளின் வாக்குகள் இல்லாமல், பாஜக மட்டும் நாம் தமிழர் கட்சியை விட அதிக வாக்குகளை வாங்கினால், கட்சியை கலைத்துவிடுவதாக அவர் சவால் விடுத்துள்ளார். கடந்த MP தேர்தலில் 37 தொகுதிகளில் போட்டியிட்ட நாதக 3.90% வாக்குகளும், அதிமுக கூட்டணியில் 5 தொகுதிகளில் போட்டியிட்ட பாஜக 3.62% வாக்குகளும் பெற்றது.