தமிழக கடல் பகுதிகளில் இன்று மாலை 4.1 மீட்டர் வரை அலைகள் எழும்பக் கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. தென் தமிழக கடற்பகுதியில் குளச்சல் முதல் கீழக்கரை வரையும், வட தமிழக கடற்பகுதியில் பழவேற்காடு முதல் கோடியக்கரை வரையும் மாலை 5.30 மணி முதல் இரவு 11.30 மணி வரை அலைகளின் உயரம் 0.6 4 மீட்டர் வரை இருக்கும். எனவே, தென் வங்கக்கடல், அந்தமான் பகுதிகளில் இன்று மீன்பிடிக்க செல்ல வேண்டாம்.

அதே நேரம், வங்கக்கடலில் உருவான தாழ்வு மண்டலம் வடகிழக்கு திசையில் நகர்வதால், இன்று முதல் மே 28ஆம் தேதி வரை தமிழகத்தில் வெப்பநிலை (3 டிகிரி செல்சியஸ் வரை) படிப்படியாக உயரக்கூடும் எனவும் தெரிவித்துள்ளது.