திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூரில் சீட் பெல்ட் அணியவில்லை என்பதற்காக அரசு பேருந்து ஓட்டுநருக்கு  போக்குவரத்து காவல்துறையினர் அபராதம் விதித்துள்ளனர். சீட் பெல்ட் அணியவில்லை, சீருடை ஒழுங்காக அணியவில்லை என்று 500 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

அரசு பேருந்து ஓட்டுநர்கள் 3 பேருக்கு தலா 500 ரூபாய் அபராதத்தை காவல்துறையினர்  விதித்துள்ளனர். கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு அரசு பேருந்தில் காவலர் ஒருவர் டிக்கெட் எடுக்க முடியாது என வாக்குவாதத்தில் ஈடுபட்டதை தொடர்ந்து இது போன்ற சம்பவங்கள் நடந்து வருகின்றது.