நாடு முழுவதும் கொரோனா அலை காரணமாக பல உயிரிழப்புகள் ஏற்பட்டது. இதில் ஒரு சிலர் தங்களுடைய பெற்றோர்களை இழந்து குடும்பங்களையும் இழந்து பரிதவித்து வந்தனர். இந்த நிலையில் கொரோனாவால் தாய் மற்றும் தந்தையை இழந்த 382 குழந்தைகளுடைய பெயரில் தலா 5 லட்சம் வீதம்ரூ. 19.1 கோடி வங்கி கணக்கில் வைப்பீடு செய்யப்படும்.

மேலும் கொரோனாவால் தாய் அல்லது தந்தையை இழந்த 13,682 குழந்தைகளுக்கு தலா மூன்று லட்சம் வீதம் ரூ.410.46 கோடியும்  வங்கி கணக்கில் வைப்பீடு செய்யப்பட்டுள்ளது என்று தமிழ்நாடு அரசு சமூக நலத்துறை தகவல் வெளியிட்டுள்ளது.