தமிழகத்தில் பள்ளிகளில் பயிலும் தங்களுடைய பிள்ளைகளின் கல்வி செயல்பாடுகளை தெரிந்து கொள்ள குறைந்த விலை ஸ்மார்ட் ஃபோன்களை ஆவது பெற்றோர்கள் வாங்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.

மாணவர்களின் கல்வி செயல்பாடுகளை பெற்றோருக்கு உடனுக்குடன் தெரிவிக்கும் விதமாக புதிய திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. தற்போது வரை 80 லட்சத்தி 30 ஆயிரம் பெற்றோர்களின் மொபைல் எண்களை கல்வித்துறை உறுதி செய்துள்ளது. இந்த மாதம் இறுதிக்குள் ஒரு கோடியே 25 லட்சம் மொபைல் எண்களும் உறுதி செய்யப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.