குன்னூரில் உள்ள சிம்ஸ் பூங்கா 1874 ஆம் ஆண்டு முதல் தொடங்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. இப்பூங்கா ரம்மியமான பள்ளதாக்கின் அடிவாரத்தில் கடல் மட்டத்திலிருந்து 1780 முதல் 1790 மீட்டர் உயரத்தில் அமைக்கப் பெற்றிருக்கிறது.  கிட்டத்தட்ட இந்த பூங்கா உருவாகி சுமார் 150 வருடங்கள் ஆகியுள்ளது.

இங்கு சுற்றுலா பயணிகள் வருவதுண்டு. இந்த நிலையில் பூங்காவில் உள்ள மரங்களின் பெயர் மற்றும் அதனுடைய வகைகளை அறிந்து கொள்வதற்கு வசதியாக ஒவ்வொரு மரங்களிலும் கியூஆர் கோடு அமைக்கப்பட்டுள்ளது. சுற்றுலா பயணிகளுக்கு இந்த வசதி உதவியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.