டிஎன்பிஎஸ்சி, டிஆர்பி போன்ற தேர்வு முகமையால் நடத்தப்பட்டு வரும் பல போட்டி தேர்வுக்கு தமிழக அரசால் இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. வேலைவாய்ப்பு பயிற்சி துறையால் 38 மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையங்களிலும் செயல்படும் தன்னார்வ அலுவலகங்கள் வட்டங்கள் மூலமாக இதற்கான பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகிறது.

தற்பொழுது டிஎன்பிசியால் நடத்தப்படவுள்ள குரூப் 1 தேர்விற்கு 90 காலி பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ள நிலையில் இதற்கான இலவச பயிற்சி வகுப்புகள் அனைத்து மாவட்டங்களில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி  வழிகாட்டும் அனைத்து அலுவலகங்களில் நடத்தப்பட உள்ளது.