தமிழகத்தில் ரேஷன் கடைகள் மூலமாக ஏழை எளிய மக்களுக்கு இலவச அரிசி, மலிவு விலையில் மளிகை பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. இதனால் பயனடைந்து வருகிறார்கள். இந்நிலையில் ரேஷன் கடை நேரத்தில் மாற்றம் ஏற்பட போவதாக தகவல் வெளியாகி உள்ளது. சென்னை மற்றும் புறநகரில் காலை 8:30 மணி முதல் பகல் 12:30 மணி வரை பிற்பகல் 3 முதல் இரவு 7 மணி வரையும் செயல்படுகின்றன . பிற மாவட்டங்களில் காலை 9 முதல் பிற்பகல் 1 மணி வரையும் பிற்பகல் 2 மணி முதல் மாலை 6 மணி வரையும் செயல்பட்டு வரும் நிலையில், கடையை மூடி மீண்டும் திறப்பதற்கு 2.30 நேரம் இடைவெளி வழங்கப்படுகிறது.

அந்த சமயத்தில் அட்டைதாரர்கள் வாங்காத பொருட்களை சில ஊழியர்கள் கடைக்கு வெளியே அனுப்புவது உள்ளிட்ட முறைகேடுகளில் ஈடுபதாக புகார் வெளியாகி வந்தது. இதனால் கடைகள் மதியம் மூடப்படும் நேரத்தை குறைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.