மத்திய வங்கக்கடல் பகுதியில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது. இது வடகிழக்கு திசையில் நகர்ந்து நாளை காலை புயலாக வலுப்பெறும். இந்த புயலுக்கு ரெமல் என பெயரிடப்பட்டுள்ளது. இந்த ரெமல் தீவிரப் புயலாக வலுப்பெற்று மே 26ஆம் தேதி நள்ளிரவில் வங்கதேசம் அருகே சாகர் தீவுக்கும் கேப்புபராவுக்கும் இடையே கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தென்கிழக்கு அரபிக்கடலில் கேரளாவை ஒட்டி ஒரு காற்றழுத்த தாழ்வுப்பகுதி நிலவுகிறது. இந்த தாழ்வுப்பகுதி புயலாக மாறுமா?, இதனால் தமிழ்நாட்டிற்கு பாதிப்பு ஏற்படுமா? என்ற எந்த தகவலும் வெளியாகவில்லை. ஒருவேளை புயல் உருவானால் அதற்கு பாகிஸ்தான் பரிந்துரைத்த “அஸ்னா” என்ற பெயர் சூட்டப்படும்.