2024 ஐபிஎல் தொடரின் Qualifier 2 சுற்றில் RR SRH அணிகள் இன்று பலப்பரீட்சை நடத்துகின்றன. இவ்விரு அணிகளும் இதுவரை 19 முறை நேருக்கு நேர் மோதி இருக்கின்றன. இதில் RR 9 முறையும், SRH 10 முறையும் வென்று இருக்கின்றன. இறுதிப்போட்டிக்கு முன்னேற இரு அணியிலும் அதிரடியாக விளையாடும் பேட்ஸ்மேன்கள் அணிவகுத்து நிற்பதால் சென்னை எம்.ஏ. சிதம்பரம் ஸ்டேடியத்தில் அனல் பறக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இப்போட்டிக்கான டிக்கெட் விற்பனை நேற்று தொடங்கிய நிலையில், பெரும்பாலான டிக்கெட்டுகள் விற்கப்படாமலே உள்ளன. கிரிக்கெட்டை கொண்டாடும் சென்னை, ஐபிஎல் ப்ளே-ஆஃப் போட்டியை காண ஆர்வம் காட்டாதது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு CSK அணி ப்ளே-ஆஃப் சுற்றுக்கு தேர்வாகத்தும் ஒரு முக்கிய காரணமாகக் கருதப்படுகிறது.