துக்ளக் ஆண்டு விழாவில் ஆடிட்டர் குருமூர்த்தி கேள்வி மற்றும் பதில்கள் வழங்கினார்.அதில் பேசிய அவர்,  ADMK  பற்றி கேட்டார்கள். ADMK அது ஒரு கட்சியே கிடையாது. அதற்க்கு லீடர்  இரட்டை இலை தான். ஆதனால் எடப்பாடி தலைவர் என்று சொல்லி நாம் ADMKவை தள்ளியும் வைக்கக்கூடாது,  அதை  தழுவவும் கூடாது. அது தான் பாஜகவின் லட்சியம். பாஜகவுக்கு  நல்லா  தெரியும். அரசியல் பண்ணுவதற்கு பாஜகவை விட  நல்ல யுக்தியான பாட்டியை பார்க்க முடியாது.  எல்லாமே சட்டீஸ்கரில் காங்கிரஸ் தான் ஜெயிக்கும் என்று காங்கிரஸ்காரர்களே படுத்து தூங்கி விட்டார்கள்.

என்ன ஆச்சின்னு உங்களுக்கு  தெரியும் ? தெரு தெருவாக எந்த இடத்தில் எத்தனை ஓட்டு பாஜகவுக்கு இருக்கும் என்று  தெரிந்த ஒரு தலைவர் இருக்கிறார், அவர் பெயர் அமித் ஷா. அதனால் பாஜக ஏதாவது பேசினாலும், பேசாமல் இருந்தாலும், விரோதமாக பேசினாலும், மௌனமாக இருந்தாலும், நட்பாக இருந்தாலும், அதற்க்கு ஒரு காரணம் இருக்கும் என்பதை மட்டும் நீங்கள் தெரிந்து கொள்ளுங்கள் என தெரிவித்தார்.