தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் புதிதாக twitter கணக்கை தொடங்கியுள்ளார். சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியின் எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலின் கடந்த டிசம்பர் மாதம் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சராக பொறுப்பேற்றார். அவரது பெயர் அமைச்சரவையில் 10-வது இடத்தை பிடித்தது.
இந்நிலையில் உதயநிதி ஸ்டாலின் ஏற்கனவே கணக்கு வைத்திருக்கும் நிலையில் தற்போது அவருடைய அலுவலகத்தின் அதிகாரப்பூர்வ twitter கணக்கை தொடங்கியுள்ளார். அதில் மாண்புமிகு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் அலுவலக டுவிட்டர் கணக்கிற்கு உங்களை வரவேற்கிறோம். இதில் உங்களுடைய கோரிக்கைகள் மற்றும் குறைகளை தெரியப்படுத்துங்கள். அவற்றின் மீது உரிய கவனம் செலுத்தப்படும் நன்றி என்று பதிவிடப்பட்டுள்ளது.
மாண்புமிகு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் திரு @Udhaystalin அவர்களுடைய அலுவலகத்தின் அதிகாரப்பூர்வ @Twitter பக்கத்திற்கு உங்களை வரவேற்கிறோம். கோரிக்கைகள் மற்றும் கருத்துக்களை தெரியப்படுத்துங்கள். அவற்றின் மீது உரிய கவனம் செலுத்தப்படும். நன்றி.
— Office of Udhayanidhi Stalin (@Office_of_Udhay) April 9, 2023
