தமிழக முதல்வர் ஸ்டாலின் இன்று 70-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இவருடைய பிறந்தநாள் விழாவை முன்னிட்டு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சேப்பாக்கம் தொகுதியில் உள்ள அரசு கஸ்தூரிபா காந்தி மருத்துவமனையில் பிறந்த குழந்தைக்கு தங்க மோதிரத்தை பரிசாக வழங்கினார்.

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேரடியாக மருத்துவமனைக்கு சென்று பிறந்த குழந்தையின் விரல்களில் தங்க மோதிரத்தை அணிவித்தார். மேலும் இது தொடர்பான வீடியோ தற்போது வலைதளத்தில் வைரல் ஆகி வருகிறது.