தமிழகத்தில் பொது தேர்வு எழுதும் 11 மற்றும் 12-ஆம் வகுப்பு மாணவர்கள் மார்ச் 3-ம் தேதி முதல் தேர்வுக்கான ஹால் டிக்கெட்டுகளை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என தற்போது தேர்வுத்துறை அறிவித்துள்ளது. அதன்படி பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் dge1.tn.gov.in என்ற இணையதள முகவரிக்குள் சென்று தங்களுடைய ஹால் டிக்கெட்டுகளை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

மேலும் 11 மற்றும் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இன்று செய்முறை தேர்வு தொடங்கியுள்ள நிலையில், மார்ச் 3-ம் தேதி ஹால் டிக்கெட் விலை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று அறிவிப்பும் இன்று வெளியாகி உள்ளது.