தமிழகத்தில் இன்று முதல் மார்ச்  4-ம் தேதி வரை மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி இன்று தென் தமிழக கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதன் பிறகு மார்ச் 2-ம் தேதி மற்றும் 3-ஆம் தேதிகளில் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.

இதைத்தொடர்ந்து மார்ச் 4-ஆம் தேதி தென் தமிழக கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மேலும் மார்ச் 4 மற்றும் 5 ஆகிய தேதிகளில் குமரிக்கடல் பகுதியில் பலத்த சூறாவளி காற்று வீச வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி மணிக்கு 40 முதல் 55 கிலோமீட்டர் வேகத்தில் சூறாவளி காற்று வீசப்படும் என்பதால் மேற்கண்ட தேதிகளில் மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.