முன்னாள் முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் அறிக்கை ஒன்றில் வெளியிட்டுள்ளார் அதில் அவர் கூறியிருப்பதாவது உன் முகத்தை காட்டினால் 30 லட்சம் வாக்குகள் நிச்சயம் என்று அண்ணா பாராட்டும் அளவுக்கு மக்கள் செல்வாக்கை பெற்றவர் தான் எம் ஜி ஆர். இந்த செல்வாக்கு தான் திமுகவை ஆட்சி கட்டிலில் அமர வைத்தது. அண்ணா மறைவுக்குப் பிறகு எம்ஜிஆர் அதிமுக இயக்கத்தை தோற்றுவித்து முதல் இடைத்தேர்தலில் தனக்குள்ள மக்கள் செல்வாக்கு நிரூபித்தவர் தான் எம்ஜிஆர்.
கடந்த 1977 ஆம் ஆண்டு நடைபெற்ற போர் தேர்தலில் வெற்றி பெற்ற முதலமைச்சராக பொறுப்பேற்றதுடன் தொடர்ந்து மூன்று முறை ஆட்சியமைத்து முதலமைச்சராகவே இறந்தார். சாதி, மதங்களுக்கு அப்பாற்பட்டவர் தான் அவர். இப்படிப்பட்ட மக்கள் தலைவரை திராவிட இயக்கத்தில் பார்ப்பனியத்தை ஊடுருவச் செய்தவர் என்றும் ஒரு பார்ப்பனிய பெண் திராவிட இயக்கத்தின் தலைவராக மாற பாதை வகுத்து தந்தவர் என்றும் திருமாவளவன் பேசியிருப்பது கடும் கண்டனத்திற்குரியது.
பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டை முப்பது சதவீதத்திலிருந்து 50 சதவீதமாக உயர்த்தியவர். அவர்களுக்கு 69% இட ஒதுக்கீட்டிற்கு சட்ட பாதுகாப்பு வாங்கி கொடுத்தவர் தான் ஜெயலலிதா. எல்லாரும் எல்லாமும் பெற வேண்டும் இங்கு இல்லாமல் இல்லாத நிலை வேண்டும் என்ற அனைத்து தரப்பு மக்களுக்காகவும் பாடுபட்டவர் தான் எம்ஜிஆர், ஜெயலலிதா அவர்களை விமர்சிப்பது நியாயம் அற்றது என்று ஓ பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
