சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ‘கூலி’ படம் வருகிற ஆகஸ்ட் 15 அன்று உலகமெங்கும் வெளியாக உள்ளது. இதற்குள் ரசிகர்களின் உற்சாகம் உச்சத்தை எட்டியுள்ளது. பட ரிலீஸுக்கு இன்னும் நான்கு நாட்கள் மட்டுமே உள்ள நிலையில், முதல் நாள் முதல் காட்சி பார்க்க என்ன சொல்லி ஆபீஸில் லீவு போடுவது என பலர் யோசித்துக்கொண்டிருக்கின்றனர்.

இந்த நிலையில், மதுரையைச் சேர்ந்த Uno Aqua Care என்ற நிறுவனம், ரஜினி ரசிகர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் வகையில் ஆகஸ்ட் 14 அன்று கம்பெனிக்கு லீவு அறிவித்துள்ளது. மேலும், அதிகாரப்பூர்வமாக வெளியிட்ட லெட்டரில் “ரஜினிகாந்த் வாழ்க” என குறிப்பிட்டுள்ளது. இந்தச் செய்தி சமூக ஊடகங்களில் வைரலாகி, ரஜினி ரசிகர்கள் மற்றும் நெட்டிசன்கள் நிறுவனம் எடுத்துள்ள இந்த முடிவை பாராட்டி வருகின்றனர்.

“>

 

‘கூலி’ ரிலீஸை கொண்டாடும் விதமாக விடுமுறை வழங்கிய இந்த அசத்தல் முடிவு, ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. “நம்ம கம்பெனியும் இப்படித்தான் லீவு கொடுத்தா நல்லா இருக்கும்” என்று பலரும் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.